தமிழில்

வேலைக்காரன்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்குமா ?

வேலைக்காரன்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்குமா ?

சிவகார்த்திகேயன் நடித்துள்ள வேலைக்காரன் படத்தின் படப்பிடிப்பு முடிவதற்கு முன்னரே டிசம்பர் மாதம் 22- ஆம் தேதி வெளியீடு என்று அறிவிக்கப்பட்டது. வேலைக்காரன் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பை சென்னையில் தொடங்கி நடைபெற்றது இதில் சிவகார்த்திகேயன், ஆர்.ஜே.பாலாஜி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கப்பட்டதை அடுத்து, ராஜஸ்தானில் இறைவா பாடலின் படப்பிடிப்பும் நடைபெற்றது. மேலும், சிவகார்த்திகேயன், நயன்தாரா, ஆர்.ஜே.பாலாஜி பங்கேற்ற இறுதிக்காட்சியும் படமாக்கப்பட்டது. இந்நிலையில், பட பணிகள் இன்னும் முடியவில்லை. எனவே இதுவரை சென்சாருக்கு அப்ளை பண்ணவில்லை. ஒரு படத்தின் தணிக்கைக்கு இரண்டு மாதா என தணிக்கை வாரியம் காலம் நிர்ணயித்துள்ளது. டிசம்பர் 22 ஆம் தேதிக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில் அதற்குள் வேலைக்காரன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker