
அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படம் மெர்சல் இப்படம் வரும் தீபாவளி விருந்தாக வரும் அக்டோபர் 18-ஆம் தேதி வெளியாகிறது. ஆதே நாளில் மோகன்லால் நடிப்பில் ‘வில்லன்’ படம் வெளியாகிறது. விஜய்க்கு தமிழ்நாடு போல கேரளாவும் நல்ல மார்க்கெட் உள்ளது. இவ்விரு படங்கள் ஒரே நாளில் கேரளாவில் வெளியானால் பெரும் வசூல் பாதிக்கும் என்பதால் மோகன்லால் ‘வில்லன்’ அக்டோபர் 27-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.