தமிழில்

மெர்சல் படம் ரிலீஸ் ஆகாது! உயர்நீதிமன்றம் அதிரடி!

விஜய் நடிப்பில் மெர்சல் படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு வெளிவந்தது. இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில், இப்படத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை விதித்துள்ளது, இது விஜய் ரசிகர்களிடம் கடும் கோபத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மெர்சல் படத்தின் டைட்டில் ஏற்கனவே வேறு ஒருவர் பதிந்துள்ளதாகவும் அதற்காக தான் தடை என கூறப்படுகின்றது, அந்த டைட்டிலை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மேலும் மெர்சல் என்ற பெயரில் இனி விளம்பரமே செய்ய கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், இதைபற்றி விஜய் மக்கள் இயக்க நிர்வாகி இடம் அணுகி கேட்ட போது தடைகளின்றி தளபதி படம் இல்லை, அந்த தடைகளை உடைத்தெறிந்து வருவதே தளபதியின் படை என்று சொன்னார்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker