தமிழில்

மெர்சலின் முதல் நாள் சாதனைகள்!

தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் உலகம் முழுவதும் நேற்று 3500 திரையரங்குகளில் வெளியானது. படம் எப்படியோ விஜய் ரசிகர்களை சந்தோஷப்படுத்திவிட்டது, அதனால், திரையிட்ட இடம் எல்லாம் படம் ஹவுஸ்புல் தான். இந்நிலையில் மெர்சல் உலகம் முழுவதும் முதல் நாள் வசூல் சுமார் 50+ கோடிக்கும் மேலாக வசூல் செய்துள்ளது.

மெர்சலின் முதல் நாள் சாதனைகள்

1. மெர்சல் தமிழகத்தில் மட்டுமே ரூ 22 கோடி வரை முதல் நாள் வசூல் செய்துள்ளது, இதன் மூலம் நீண்ட நாட்களாக முதலிடத்தில் வசூலில் இருந்த கபாலியை மெர்சல் பின்னுக்கு தள்ளியுள்ளது.
2. மெர்சல் அமெரிக்காவில் வசூல் சாதனை செய்துள்ளது, ப்ரீமியர் காட்சி மற்றும் அதை தொடர்ந்து ஓடிய காட்சி என மெர்சல் 434k டாலர் வசூல் செய்துள்ளது. USA – வில் தங்கள், பாகுபலி-2 படங்களின் வசூல் முறியடித்தது.
3. ஆஸ்திரேலியாவில் ரூ 68 லட்சம், UK-வில் ரூ 98 லட்சம் வசூல் செய்து பிரமாண்ட சாதனையை நிகழ்த்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker