தமிழில்

பிரபல கன்னட நடிகர் உபேந்திரா விரைவில் தனிக்கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்!

பிரபல கன்னட நடிகரும், இயக்குநருமான உபேந்திரா நடிகர் விஷாலுடன் இணைந்து தமிழில் ‘சத்யம்’ படத்திலும் நடித்துள்ளார்.

கடந்த மக்களவைத் தேர்தலில் இவர் தனது மனைவி நடிகை பிரியங்கா திரிவேதியுடன் மஜத வேட்பாளர் கீதா சிவராஜ்குமாருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். அப்போதே அவர் அரசியலில் ஈடுபட இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இதை மறுத்தபோதிலும் அவர் சமூக வலைதளங்களில் அரசியல் கருத்துகளை எழுதி வந்தார்.

இந்நிலையில் உபேந்திரா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறும்போது, மக்களின் வரிப்பணத்தை கொள்ளையடிக்கிறார்கள். கல்வி, சுகாதாரம் போன்ற அத்தியாவசிய தேவைக்காக வரிப்பணத்தை பயன்படுத்துவதில்லை. சாதியை வைத்து மக்களை கூறு போடுகிறார்கள்.

மக்களுக்கு பணியாற்றவே அரசியலில் ஈடுபட முடிவெடுத்துள்ளேன். இதற்காக மக்களிடம் ஆலோசனைகள் கேட்டு வருகிறேன். இதன் பேரில் தனிக்கட்சி தொடங்குவேன். விரைவில் கட்சியின் பெயர், சின்னம் மற்றும் கொள்கைகளை அறிவிப்பேன். வருகிற சட்டப்பேரவை தேர்தலில் எனது கட்சி அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும்” என்றார்.

கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அவரது அறிவிப்பு அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker