தமிழில்

ஜோசஃப் விஜயின் மோடி வெறுப்பே “மெர்சல்” – எச்.ராஜா

ஜோசஃப் விஜயின் மோடி வெறுப்பே "மெர்சல்" - எச்.ராஜா தளபதி விஜய் நடிப்பில் மெர்சல் தீபாவளிக்கு வெளியானது. படத்தையும் ரசிகர்கள் மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடினார்கள். தமிழ்நாட்டை தாண்டி ஆந்திரா, கேரளா, வெளிநாடுகள் என அனைத்து இடத்திலும் மாஸ் வசூல் செய்து வருகிறது. இந்நிலையில் மெர்சல் படத்தில் GST, மற்றும் DIGITAL INDIA காட்சிகள் நீக்கவேண்டும் என தற்போது எச்.ராஜா வலியுறுத்தி உள்ளார் அவர் தனது TWITTER பக்கத்தில் மெர்சல் பட வசனம் விஜய் அவர்களின் பொருளாதார அறிவீனத்தையே காட்டுகிறது. முதலில் GST புதிய வரி அல்ல சாராயத்திற்கு 58% மேல் வரி விதிக்கப்படுகிறது. சிங்கப்பூரில் மருத்துவம் இலவசம் என்பது பொய். இந்தியாவில் பள்ளி கல்வி, மருத்துவம் ஏழைகளுக்கு இலவசம். ஏற்கனவே நாடுமுழுவதும் பள்ளி கல்வி மற்றும் மருத்துவம் அரசு பள்ளி மற்றும் அரசு மருத்துவமனையில் இலவசம் தான். தமிழகத்தில் கடந்த 20 yr கட்டப்பட்ட சர்ச் 17500, மசூதிகள் 9700, கோவில்கள் 370 இப்ப எதை தவிர்த்து மருத்துவ மனை கட்டணும் என்கிறார் விஜய். விஜய் அவர்களின் வருமான வரி ஏய்ப்பு செய்தி பற்றி விளக்கம் எதிர்பார்க்கலாமா? இவ்வாறு எச்.ராஜா TWITTER பக்கத்தில் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker