தமிழில்

‘செம’ படத்துக்கு தணிக்கையில் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளது!

இயக்குநர் பாண்டிராஜ் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் வள்ளிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘செம’. ஜி.வி.பிரகாஷ் நாயகனாக நடிப்பது மட்டுமன்றி படத்துக்கு இசையும் அமைத்துள்ளார். அர்த்தனா, யோகிபாபு, கோவை சரளா, மன்சூர் அலிகான், சுஜாதா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.

இந்நிலையில் ‘செம’ படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. ‘செம’ படகுழு தணிக்கைக்கு விண்ணப்பித்தார்கள். தணிக்கை அதிகாரிகள் ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர்.’செம’ செப்டம்பரில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. இதனையடுத்து விரைவில் வெளியீட்டு தேதியை இறுதி செய்யவுள்ளனர்.

ஏற்கனவே ஜி.வி.பிரகாஷ் நடித்து முடித்த ‘4ஜி’ மற்றும் ‘நாச்சியார்’ உள்ளிட்ட படங்களின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

Related Articles

Leave a Reply

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker